IPL Auction
IPL Auction pt desk
T20

பெரிய வீரர்கள் தேவை இல்லை... ஆனால் இந்திய பௌலர்கள் நிச்சயம் தேவை - ஏலத்தில் LSG என்ன செய்யும்?

Viyan

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்

தங்கள் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அனுப்பி வைத்துவிட்டு, தேவ்தத் படிக்கலை அங்கிருந்து இறக்குமதி செய்திருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ். இதன்மூலம் 2.25 கோடி ரூபாய் தொகையும் அந்த அணிக்கு மிச்சம் ஆகியிருக்கிறது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமேரியோ ஷெபர்டை மும்பை இந்தியன்ஸுக்கு 50 லட்ச ரூபாய்க்கு அனுப்பியிருக்கிறது அந்த அணி.

LSG

ரிலீஸ் செய்த வீரர்கள்

மற்ற அணிகளைப்போல் பெரிய தொகைக்கு வாங்கிய வீரர்கள் யாரையும் லக்னோ விடுவிக்கவில்லை. பேக் அப் வீரர்களாக இருந்த 8 பேரை அவர்கள் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஜெய்தேவ் உனத்கட், கருண் நாயர், டேனியல் சாம்ஸ் போன்ற வீரர்கள் அந்தப் பட்டியலில் அடக்கம். அவர்கள் ரிலீஸ் செய்த 8 வீரர்களில் ஒருவர் கூட 75 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கப்படவில்லை.

எத்தனை வீரர்கள் தேவை? எவ்வளவு இருக்கிறது?

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 8

ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 19

நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 6

நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 2

ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 13.15 கோடி ரூபாய்

பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது

1. கேஎல் ராகுல்

2. குவின்டன் டி காக்*

3. தேவ்தத் படிக்கல்

4. நிகோலஸ் பூரண்*

5. தீபக் ஹூடா

6. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்*

7. குருனால் பாண்டியா

8.

9. மார்க் வுட்*

10. ரவி பிஷ்னாய்

11. மோசின் கான் / யஷ் தாக்கூர்

இம்பேக்ட் பிளேயர்: கிருஷ்ணப்பா கௌதம் / ஆயுஷ் பதோனி

avesh khan

எந்தெந்த வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும்?

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸை பொறுத்தவரை அவர்களுக்கு இந்த ஏலத்தில் அதிக தேவைகள் இல்லை. பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய 1 வீரரை இந்த ஏலத்தில் அவர்கள் முக்கியமாக டார்கெட் செய்வார்கள். ஆவேஷ் கானை வெளியே அனுப்பியிருக்கும் லக்னோ, ஒரு முன்னணி பௌலரை வாங்கி அந்த இடத்தை நிரப்பவேண்டியிருக்கிறது. அதனால் ஒரு 12-13 கோடி ரூபாய் வரை அந்த அணி ஹர்ஷல் படேலுக்குப் போட்டி போடும். கார்த்திக் தியாகி, ஷிவம் மாவி, யஷ் தயால் போன்ற வீரர்களையும் கூட அவர்கள் டார்கெட் செய்வார்கள். ஒருசில இளம் இந்திய பேட்ஸ்மேன்களையும் பேக் அப் ஆப்ஷனாக அவர்கள் வாங்க முயற்சிப்பார்கள்.

வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை டேனியல் சாம்ஸை அந்த அணி ரிலீஸ் செய்திருக்கிறது. ரொமேரியோ ஷெபர்டை டிரேட் செய்திருக்கிறது. அந்த 2 இடங்களையும் அவர்கள் ஓரளவு அடிப்படை விலையில் சில வீரர்களை வாங்கி நிரப்பலாம். ஸ்டாய்னிஸுக்கு பேக் அப் ஆக ஒரு ஆல்ரவுண்டர் அவசியம் தேவைப்படும். ஏற்கெனவே நவீன் உல் ஹக் போன்ற ஒரு வெளிநாட்டு வீரர் இருக்கும் அந்த அணி, அந்நாட்டின் வளரும் ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை வாங்க நினைக்கலாம். ஒரு வேகப்பந்துவீச்சாளரையும் அவர்கள் அடிப்படை விலையில் வாங்க முயற்சிப்பார்கள்.