Pathirana, Dhoni
Pathirana, Dhoni Twitter
T20

“இலங்கைக்கு ஒரு சொத்தாக இருப்பார்” ஆனால் அவர் இதை மட்டும் செய்யவேண்டாம்!- பதிரானாவுக்கு தோனி அட்வைஸ்

Rishan Vengai

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ரைவல்ரி போட்டியில், சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சென்னை அணி, மும்பையை 139 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது. போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இளம்வீரர் பதிரானா, 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

MI - Csk

140 என்ற இலக்கை துரத்திய சென்னை அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. 2010ஆம் ஆண்டிற்கு பிறகு, சுமார் 13 வருடங்களுக்கு பின், மும்பை அணியை சேப்பாக்கத்தில் தோற்கடித்து, பதிலடி கொடுத்துள்ளது சென்னை அணி. அபாரமான பவுலிங்கை வெளிப்படுத்தி, வெற்றிக்கு வித்திட்ட பதிரானாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இலங்கைக்கு மிகப்பெரிய சொத்தாக இருப்பார்! - எம்எஸ் தோனி

இந்நிலையில் போட்டிக்கு பிறகு பதிரானா குறித்து பேசிய எம்எஸ் தோனி, “அவருடைய வெற்றியானது வேகம் மற்றும் வேரியேசனை சார்ந்தது அல்ல என நினைக்கிறேன். அது முழுக்க முழுக்க அவருடைய கன்சிஸ்டன்ஸியால் மட்டுமே கிடைத்துள்ளது.

Pathirana

இலங்கைக்கு ஒரு மிகச்சிறந்த சொத்தாக இருப்பார். அவர் அனைத்து ஐசிசி தொடரிலும் விளையாடவேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் சிகப்பு-பந்து கிரிக்கெட்டில் இருந்து மட்டும் விலகியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று தன்னுடைய அறிவுரையை வழங்கினார்.

சிஎஸ்கே அணி என்னுடைய நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது!

ஆட்டநாயகன் விருது பெற்றபிறகு பேசிய பதிரானா, “CSK உடனான எனது பயணம் கடந்த ஆண்டிலிருந்து தான் தொடங்கியது. மாற்று வீரராக உள்ளே வந்து, இரண்டு போட்டிகளில் மட்டுமே அப்போது விளையாடினேன். ஆனால் இந்த சீசனில் என்னால் அதிக போட்டிகளில் விளையாட முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை அணி நிர்வாகம் எனக்கு அதிகமான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Pathirana

மேலும் விக்கெட்டை எடுத்தபிறகு அமைதியாக நின்று கண்ணை மூடி கொண்டாடுவது குறித்து பேசிய பதிரானா, ”நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன்” என்று குறிப்பிட்டார்.