Gujarat Titans PTI
T20

ஐபிஎல் 2023: முதல் அணியாக Play Off-க்கு தகுதிப்பெற்ற குஜராத் டைடன்ஸ்!

ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.

Jagadeesh Rg

ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது ஐதராபாத் அணி. ஆனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

Gujarat Titans

இதனையடுத்து குஜராத் அணி 34 ரன்களில் வெற்றிப்பெற்று, இந்த சீசனில் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக Play Off சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்னும் குஜராத் அணிக்கு ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருப்பதால், வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அதே முதல் இடத்தில்தான் அந்த அணி நீடிக்கும்.

இப்போதைய நிலவரப்படி புள்ளிகள் பட்டியலில் குஜராத்துக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே 15 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், மும்பை மற்றும் லக்னோ அணிகள் முறையே 14 மற்றும் 13 புள்ளிகளுடன் 3, 4 ஆம் இடத்திலும் உள்ளன.