Gujarat Giants
Gujarat Giants Gujarat Giants
T20

WPL 2024 | முதல் சீசன் குழப்பங்களை சரிசெய்திருக்கிறதா குஜராத் ஜெயின்ட்ஸ்

Viyan

வுமன்ஸ் பிரீமியர் லீக் (WPL) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கிறது. அதன் பலம், பலவீனம் என்னென்ன? ஓர் அலசல். இந்த எபிசோடில் குஜராத் ஜெயின்ட்ஸ்.

WPL 2023 செயல்பாடு

கடந்த சீசன் அந்த அணிக்கு மிகவும் மோசமாக இருந்தது. 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று கடைசி இடமே பிடித்தது குஜராத். கேப்டன் பெத் மூனி முதல் போட்டியிலேயே காயம் அடைந்து வெளியேற ஸ்னே ராணா அணியை வழிநடத்தியவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அது அந்த அணிக்கு மேலும் சிக்கல்களைக் கொடுத்தது. தொடர் மாற்றங்கள், அனுபவம் வாய்ந்த இந்திய வீராங்கனைகள் இல்லாதது எல்லாம் அவர்களும் மேலும் மேலும் பிரச்சனைகள் கொடுத்தது. அந்த நெருக்கடிக்கு மத்தியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆஷ் கார்ட்னரால் கூட தன் வழக்கமான செயல்பாட்டைக் கொடுக்க முடியவில்லை.

2024 ஏலத்தில்...

2023 சீசன் படுமோசமாஅ அமைந்ததால், அந்த அணி பெரிய மாற்றங்களை செய்தது. மொத்தம் 11 வீராங்கனைகளை ரிலீஸ் செய்தது அந்த அணி. அனபல் சதர்லேண்ட், அஷ்வனி குமார், ஜார்ஜியா வேரம், ஹர்லி காலா, கிம் கார்த், மான்சி ஜோஷி, மோனிகா படேல், பருனிகா சிசோடியா, சப்பினேனி மேகனா, சோஃபிய டங்க்லி, சுஷ்மா வெர்மா என முக்கால்வாசி அணியே காலி ஆனது. அதிலும் உலகத்தர ஆல் ரவுண்டராக உருவெடுத்துக்கொண்டிருக்கும் அனபல் சதர்லேண்டை ரிலீஸ் செய்தது அனைவருக்குமே பெரும் அதிச்சியாக இருந்தது. சரி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு தேவையான ஓட்டைகளை அடைத்தார்களா என்றால், அதையும் 100 சதவிகிதம் ஆம் என்று சொல்லிட முடியாது. ஏற்கெனவே பெத் மூனி, லாரா வோல்வார்ட் என இரு உலகத்தர டாப் ஆர்டர் பேட்டர்கள் இருக்கும்போது, 1 கோடி ரூபாய் கொடுத்து ஃபீபி லிட்ச்ஃபீல்டை வாங்கினார்கள். வேகப்பந்துவீச்சை பலப்படுத்த மேக்னா சிங், லாரன் சியாட்டில், கேத்ரின் பிரைஸ் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். 4 வெளிநாட்டு வீராங்கனைகள் போக, கூடுதலாக ஒரு அசோசியேட் வீராங்கனையை களமிறக்கலாம் என்பதால் பிரைஸை வாங்கியிருப்பது நல்ல முடிவு.

பலம்

பெத் மூனி, ஆஷ் கார்ட்னர், லாரா வோல்வார்ட் மூவரும் அந்த அணியின் பேட்டிங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்கள். தனி ஆளாக போட்டியின் போக்கை மாற்றக்கூடியவர்கள். அவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு வைதிருக்கிறார்கள்.

பலவீனம்

அந்த மூவர் போக, மற்ற இடங்கள் அனைத்துமே கேள்விக்குறியானது தான். எதிர்பார்க்கும் செயல்பாடு அவர்களிடமிருந்து வந்தால் அந்த அணி தப்பிக்கும். இல்லையேல் கடந்த ஆண்டின் முடிவு மீண்டும் தொடரலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

1. பெத் மூனி (கேப்டன்) (விக்கெட் கீப்பர்)
2. லாரா வோல்வார்ட்
3. தயாளன் ஹேமலதா
4. ஹர்லீன் தியோல்
5. ஆஷ்லி கார்ட்னர்
6. வேதா கிருஷ்ணமூர்த்தி
7. ஸ்னே ராணா
8. கேத்ரின் பிரைஸ்
9. தனுஜா கன்வெர்
10. மேக்னா சிங்
11. லியா தஹுஹு