CSK Champions
CSK Champions Chennai IPL Twitter
T20

’கேம் சேஞ்சர்’ முதல் ’மோஸ்ட் ’வேல்யூயபிள் வீரர்’ விருது வரை..ஜொலித்த வீரர்களும்; ஐபிஎல் வீரர்களும்!

Justindurai S

அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடைசிப் பந்து வரை பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சி.எஸ்.கே. அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 5-வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டும், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டியும் வெற்றிப் பெற்றுத் தந்தார் ரவீந்திர ஜடேஜா. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (5 முறை) சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே அணி.

இந்தாண்டு கோப்பை வென்ற சென்னை அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ.12.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

GT vs Csk

பிற பரிசு விவரங்கள்:

* இறுதிப்போட்டியின் எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர்: அஜிங்க்யா ரஹானே (சிஎஸ்கே) - ₹1 லட்சம்

* இறுதிப்போட்டியின் கேம் சேஞ்சர்: சாய் சுதர்சன் (குஜராத்) - ₹1 லட்சம்

* இறுதிப் போட்டியின் மதிப்புமிக்க வீரர்: சுதர்சன் - ₹1 லட்சம்

* இறுதிப் போட்டியில் அதிக தூரத்திற்கு சிக்ஸர்: சுதர்சன் - ₹1 லட்சம்

* இறுதிப் போட்டியின் சிறந்த கேட்ச்: எம்எஸ் தோனி (சிஎஸ்கே) - ₹1 லட்சம்

* ஆட்டநாயகன் - டெவோன் கான்வே (சிஎஸ்கே) - ₹5 லட்சம்

Gujarat Titans

ஆரஞ்சு கேப்: ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு சீசனில் இந்த விருதை குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் வென்றுள்ளார். இந்த சீசனில் அவர், 17 ஆட்டங்களில் 890 ரன்கள் குவித்துள்ளார். 3 சதம், 4 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரது சராசரி 59.33. அதிகபட்சமாக 129 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும். மோஸ்ட் வேல்யூயபிள் வீரர், கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன் விருதையும் கில் தான் வென்றுள்ளார்.

பர்ப்பிள் கேப்: நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக குஜராத் வீரர் முகம்மது ஷமி உள்ளார். 17 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 28 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.

நடப்பு சீசனில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 625 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் இதில் அடங்கும். அதிகபட்சமாக 124 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.

சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் கிளென் மேக்ஸ்வெல், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதை வென்றுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.

கேட்ச் ஆஃப் தி சீசன்: குஜராத் வீரர் ரஷித் கான் இந்த விருதை வென்றுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும்.

சீசனின் நீளமான சிக்ஸர்: ஆர்சிபி அணியின் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 115 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்ததற்காக ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வென்றுள்ளார்.

ipl

2023 ஐபிஎல் தொடரில் சில சாதனைகள்

* இந்த சீசனில் மட்டும் 1,124 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 36 சிக்சர்கள் அடித்துள்ளார்.

* இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக 2,174 பவுண்டரிகள் விளாசப்பட்டுள்ளன.

*இந்த சீசனில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (129 ரன்கள்) அடித்தவராக சுப்மன் கில் உள்ளார்.

* இந்த சீசனில் முகமது ஷமி மட்டுமே அதிகபட்சமாக 193 டாட் பால்கள் வீசியுள்ளார்.

* இறுதிப் போட்டியில் குஜராத் அணி எடுத்த 214 ரன்கள் தான் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

* இந்த சீசனில் 37 முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

* வான்கடே ஸ்டேடியம் மற்றும் ஈடன் கார்டன்ஸ் சிறந்த பிட்ச் மற்றும் கிரவுண்ட் விருதை வென்றன.