ஹர்திக் பாண்டியா - அஸ்வனி குமார் BCCI
T20

இப்படி பண்ணியிருக்க கூடாது ஹர்திக் பாண்டியா.. கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்! என்ன நடந்தது?

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக போட்டியில் விளையாடிய 23 வயது வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.

Rishan Vengai

18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 5 கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2 தோல்விகளை வரிசையாக சந்தித்து தடுமாறிவருகின்றன.

மும்பை இந்தியன்ஸ்

இந்த சூழலில் 2 தோல்விகளுக்கு பிறகு 3வது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது மும்பை அணி. இதில் சிறப்பாக பந்துவீசிய மும்பை அணி 116 ரன்னில் கொல்கத்தாவை சுருட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. அறிமுக போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் 3 ஓவர் மட்டுமே வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ashwani kumar

மும்பை அணி முதல் வெற்றியை ருசித்தபோதும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். என்ன காரணம் பார்க்கலாம்..

வரலாறு படைத்த அஸ்வனி குமார்!

அறிமுக ஐபிஎல் போட்டியில் களமிறங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 23 வயதேயான மும்பை அணி வீரர் அஸ்வனி குமார், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

IPL அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு:

1. அல்சாரி ஜோசப் (MI) - 6/12 vs SRH - 2019

2. ஆண்ட்ரூ டை (GL) - 5/17 vs RPS - 2017

3. ஷோயப் அக்தர் (KKR) - 4/11 vs DD - 2008

4. அஸ்வனி குமார் (MI) - 4/24 vs KKR - 2025*

5. கெவோன் கூப்பர் (RR) - 4/26 vs KXIP - 2012

6. டேவிட் வைஸ் (RCB) - 4/33 vs MI - 2015

ஹர்திக் பாண்டியாவை விமர்சிக்கும் ரசிகர்கள்..

மும்பை அணிக்காக களம்கண்ட 23 வயது இளம் வீரர் அஸ்வனி குமார் அறிமுக போட்டியில் 3 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்த சூழலில் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற மீதமொரு ஓவர் இருந்தபோதும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா அஸ்வனியின் ஸ்பெல்லை முடிக்க அனுமதிக்கவில்லை. ஹர்திக் பாண்டியாவின் இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.

இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் ஒரு இந்திய பவுலர் கூட 5 விக்கெட் வீழ்த்தியதில்லை என்பதால், ஒருவேளை அஸ்வனி குமார் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தால் அது வரலாற்று சாதனையாகவும், இளம் வீரருக்கு ஒரு பெரிய உத்வேகமாகவும் அமைந்திருக்கும்.

சில ரசிகர்கள் அஸ்வனி குமாரை ஆடும் லெவனில் அனுமதித்ததற்கு ஹர்திக் பாண்டியாவை பாராட்டினாலும், அந்த ஒரு ஓவரை வீசவைத்திருக்கலாம் என்ற வருத்தத்தையும் பதிவுசெய்துவருகின்றனர்.