csk x
T20

மேட்ச் டிக்கெட்டை வைத்து மாநகர பேருந்தில் இலவச பயணம்.. சிஎஸ்கே அறிவிப்பு!

சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளை காணவரும் ரசிகர்கள், சென்னை போக்குவரத்து மாநகர பேருந்துகளில் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

ஐபிஎல் டி20 லீக்கான வெற்றிகரமாக 18வது சீசனில் காலடி எடுத்துவைக்க உள்ளது. 17 ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டு தலைசிறந்த அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் திகழ்கின்றன.

தலா 5 முறை என 10 கோப்பைகளை வென்றிருக்கும் இவ்விரண்டு அணிகளும் தங்களுடைய 6வது கோப்பைக்காக 2025 ஐபிஎல் தொடரில் காலடி வைக்க உள்ளன.

hardik pandya - ruturaj gaikwad

இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரின் முதல் மோதலில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஒன்றையொன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் சிஎஸ்கே போட்டிகளை காணவரும் ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் வைத்திருந்தால் பேருந்தில் இலவச பயணம்..

சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வைத்திருந்தால் சென்னை மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்துகொள்ளலாம் என சிஎஸ்கே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “ரசிகர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மெட்ரோபாலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (சென்னை) லிமிடெட் (MTC) உடன் இணைந்து இரண்டாவது ஆண்டாக, TATA IPL 2025-க்காக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த ஊர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வைத்திருக்கும் ரசிகர்கள், போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே MTC பேருந்துகளில் (ஏசி இல்லாத) இலவசமாக பயணிக்கலாம். போட்டி டிக்கெட்டுகள் பயண டிக்கெட்டுகளாக இரட்டிப்பு பயனை கொடுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்..

சிஎஸ்கே vs மும்பை - மார்ச் 23 - சென்னை

சிஎஸ்கே vs ஆசிபி - மார்ச் 28 - சென்னை

சிஎஸ்கே vs ராஜஸ்தான் - மார்ச் 30 - குவஹாத்தி

சிஎஸ்கே vs டெல்லி - ஏப்ரல் 5 - சென்னை

சிஎஸ்கே vs பஞ்சாப் - ஏப்ரல் 8 - சண்டிகர்

சிஎஸ்கே vs கொல்கத்தா - ஏப்ரல் 11 - சென்னை

சிஎஸ்கே vs லக்னோ - ஏப்ரல் 14 - லக்னோ

சிஎஸ்கே vs மும்பை - ஏப்ரல் 20 - மும்பை

சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் - ஏப்ரல் 25 - சென்னை

சிஎஸ்கே vs பஞ்சாப் - ஏப்ரல் 30 - சென்னை

சிஎஸ்கே vs ஆர்சிபி - மே 3 - பெங்களூரு

சிஎஸ்கே vs கொல்கத்தா - மே 7 - கொல்கத்தா

சிஎஸ்கே vs ராஜஸ்தான் - மே 12 - சென்னை

சிஎஸ்கே vs குஜராத் - மே 18 - அகமதாபாத்