chennai super kings web
T20

CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ருதுராஜ் கெய்க்வாட் OUT? கேப்டனாகும் தோனி? - ஹஸி சொன்ன தகவல்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் விளையாட மாட்டார் என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - சந்தானம்

2025 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று சிஎஸ்கே அணி சுமாரான சீசனாக தொடங்கியுள்ளது. இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு நாளை டெல்லி அணியை எதிர்த்து விளையாடவிருக்கும் சென்னை அணி, ஹோம் கிரவுண்டரில் வெற்றியை தேடி களம்காணவிருக்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட்

இந்தசூழலில் பேட்டிங்கில் ஒரே நம்பிக்கையாக ஜொலித்துவந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட மாட்டார் என்ற தகவல் சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அணியை தோனி வழிநடத்துவார் என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மைக் ஹஸி சொன்ன தகவல்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்த ஆண்டு முதல் ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்தி வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துஷார் தேஷ்பாண்டே பந்து வீச்சில் ருத்துரஜ் புல் ஷாட் அடிக்க முயற்சி செய்த நேரத்தில் வலது கரத்தில் ( Right fore arm) பகுதியில் அடிபட்டது.

இந்தநிலையில் அவர் நாளை நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விலையாடுவாரா என்ற கேள்வி எழுந்து  வந்த நிலையில், கெய்க்வாட் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை இருப்பினும் இன்று இரவு அவர் மீண்டும் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பின் மட்டுமே அவர் நாளை விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி தெரிவித்துள்ளார்.

தோனி

மேலும் அவர் இல்லை என்றால் அடுத்த கேப்டன் யார் என்ற தேர்வுகுறித்து இதுவரை யோசிக்கவில்லை என்று கூறிய அவர், அணியில் ஒரு இளம் விக்கெட் கீப்பர் உள்ளார் என தெரிவித்தார். ஒரு வேளை நாளை கெய்க்வாட் விளையாடவில்லை என்றால் அணியை மீண்டும் தோனி வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது என தெரிய வருகிறது.