ஸ்டார்க் - அனிகேத் வெர்மா cricinfo
T20

DCvSRH| 5 விக்கெட்டுகள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்.. ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி!

2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

Rishan Vengai

18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் எதிர்த்து விளையாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

37 ரன்னுக்கு 4 விக்கெட் காலி..

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகப்பெரிய டோட்டலை குவிக்க களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு 5 ஓவருக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, அபிஷேக் சர்மா 1 ரன்னில் ரன் அவுட்டாக, இஷான் கிஷன் 2, நிதிஷ்குமார் ரெட்டி 0 ரன் மற்றும் டிராவிஸ் ஹெட் 22 ரன்னிலும் வெளியேற அணி தடுமாறியது.

5வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விக்கெட் கீப்பர் கிளாசன் மற்றும் 23 வயது வீரர் அனிகேத் வெர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி அசத்தினாலும், கிளாசனை 32 ரன்னில் அவுட்டாக்கிய மோஹித் சர்மா சரியான நேரத்தில் விக்கெட்டை எடுத்துவந்தார்.

74 ரன்கள் அடித்த 23 வயது வீரர் அனிகேத் வெர்மா!

என்னதான் கிளாசன் அவுட்டாகி வெளியேறினாலும் 23 வயதேயான அனிகேத் வெர்மா 5 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். 74 ரன்கள் அடித்து ஆபத்தான வீரராக ஜொலித்த அனிகேத் வெர்மாவை சிக்சர் லைனில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் ஃபிரேசர் மெக்கர்க்.

அனிகேத் வெர்மா இருக்கும்வரை 190 ரன்களை சன்ரைசர்ஸ் எட்டும் என நினைத்தபோது, அவர் அவுட்டான பிறகு 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

starc

164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடியது.

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி!

164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் பிரேசர் மெக்கர்க் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 27 பந்தில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடித்து டு பிளெசிஸ் அசத்த, 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் மெக்கர்க் 38 ரன்கள் அடித்தார்.

அரைசதம் விளாசினார் ஃபாஃப் டு பிளெசிஸ்!

முதல் விக்கெட்டுக்கே இந்த ஜோடி 81 ரன்கள் அடித்து அசத்த, அடுத்துவந்த போரல் 34 ரன்கள், கேஎல் ராகுல் 15 மற்றும் ஸ்டப்ஸ் 21 ரன்கள் என அதிரடியாக விளையாட 16 ஓவர் முடிவில் இலக்கை எட்டிய டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.