சிஎஸ்கே,
சிஎஸ்கே, IPL Page
T20

சென்னையில் நடக்கும் IPL போட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை? CSK-வின் திட்டம் என்ன?

webteam

செய்தியாளர்: T. சந்தானகுமார்

ஐபிஎல் தொடருக்கான வரவேற்பு ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதனால், சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் சிக்கல் எழுந்துள்ளது. அது ஏன்? என்ன சிக்கல்? பார்க்கலாம்...

IPL Ticket

டிக்கெட் விற்பனையை பொறுத்தவரை இதுநாள்வரை நேரடி மற்றும் இணையம் வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் நேரில் வந்தால் டிக்கெட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உலகின் பல மூலைகளிலுள்ள ரசிகர்களும், முந்தைய நாள் இரவு முதல் சென்னை ஸ்டேடியம் வாயிலில் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்குவது உண்டு. இரவு முழுவதும் அப்படி காத்திருந்தாலும் பலருக்கும் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்தது. இதனால் அவர்கள் பெரிய அளவில் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல நேரடி விற்பனையில் கிடைக்கும் டிக்கெட்கள் கள்ள சந்தையில் பெரிய அளவில் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகாரும் இருந்தது. இதனால் இந்த ஆண்டு முதல் அனைத்து டிக்கெட்களையும் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய சி.எஸ்.கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சென்னையில் வருகின்ற 22ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தேதிக்கு பின் இணையத்தில் தொடங்கும் எனவும் தெரிய வந்துள்ளது.