KKR
KKR Twitter/ KKR
T20

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வெளியேறும் மற்றொரு நட்சத்திர வீரர்! தொடரும் KKR-க்கான சோதனைகள்!

Rishan Vengai

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக வலுவான அணிகளுக்கான வரிசையில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தற்போது பல முக்கிய வீரர்கள் இல்லாமல் தவித்து வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

shreyas iyer

ஸ்ரேயாஸ் ஐயர் விலகியதை தொடர்ந்து இடது கைபேட்டரான நிதிஷ் ரானா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஐபிஎல்-ல் தனது முதல் போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் தான் கொல்கத்தா அணியால் போட்டியில் வலுவான நிலையில் இருக்கமுடியாமல் போனது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் இருந்திருந்தால் விக்கெட் சரிவை சரிகட்டியிருக்கலாம்.

இந்நிலையில்தான் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாமல் தடுமாறும் கொல்கத்தா அணியில் இருந்து, வங்கதேச அணியின் மூத்த ஆல்ரவுண்டர் வீரரான ஷாகிப் அல் ஹசன் 2023 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

shahib al hasan

கிரிக்பஸ் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, மூத்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப், இண்டர்நேசனல் போட்டிகள் மற்றும் தனிப்பட்ட சில பிரச்னைகள் காரணமாக தொடரில் இருந்து வெளியேற இருப்பதாகவும், அதற்காக அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகத்திடம் முறையாக மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு விலைபோகியுள்ள வங்கதேச வீரர்களான லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரையும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விளையாட அனுமதிக்க முடியும் என்றும், இண்டர்நேசனல் போட்டிகளை கருத்தில் கொண்டு முழுதொடரில் விளையாடுவதற்கான அனுமதியை ஏற்கனவே மறுத்திருந்தது பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம்.

litton dass

இந்நிலையில் தான் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் ஷாகிப் அல் ஹசன். மற்றொரு வீரரான லிட்டன் தாஸ் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஏப்ரல் 10ஆம் தேதி ஐபிஎல் திரும்புவார் என்றும், மே மாதம் 1ஆம் தேதிவரை விளையாடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.