ஒலிம்பிக், கிரிக்கெட் freepik
T20

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் | 6 அணிகளுக்கு அனுமதி! அமெரிக்கா நேரடி தகுதி

2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

Prakash J

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் இடம்பெற உள்ளது. 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

இப்போட்டிகள் டி20 வடிவத்தில் நடைபெறும் என்றும் தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்பதால் அமெரிக்க அணி நேரடியாக தகுதிபெறும் எனத் தெரிகிறது.

model image

ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. கடைசியாக, 1900ஆவது ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. முன்னதாக, 2022-இல் நடைபெற்ற ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.