ban vs ind 1 run win
ban vs ind 1 run win web
T20

வங்கதேசத்தின் இதயங்களை உடைத்த தோனி.. சரித்திரத்தில் மறக்க முடியாத ரன்அவுட்! 1 ரன்னில் வென்ற இந்தியா!

Rishan Vengai

வங்கதேச அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான மோதலானது 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்த வங்கதேச அணி இந்தியாவை தொடரிலிருந்தே வெளியேற்றிய போது தொடங்கியது. அதற்கு பிறகு எப்போது வங்கதேசத்திற்கு எதிராக போட்டி நடைபெற்றாலும், இந்திய வீரர்கள் அனல்பறக்க போட்டியில் பங்கேற்பார்கள். அதில் குறிப்பாக மகேந்திர சிங் தோனி எப்போதும் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சிதறடிப்பதில் எந்தவித கருணையும் காட்டியதே இல்லை.

ind vs ban

ஒரு பெரிய உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு எப்போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்றாலும், அவ்வணிக்கு எதிராக வெற்றியை உறுதிசெய்வதில் பேட்டிங் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

india 2007 defeat

அந்தவகையில் 2016 டி20 உலகக்கோப்பையின் முக்கியமான போட்டியில் இந்தியாவிற்கு எதிராக எளிதான வெற்றியை பெறவேண்டிய இடத்திலிருந்த வங்கதேச அணியை, தன்னுடைய ஸ்மார்ட் கேப்டன்சியின் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தட்டிப்பறித்தார் மகேந்திர சிங் தோனி. அந்தப்போட்டியில் எப்படியும் இந்திய அணி தோல்விதான் பெறப்போகிறது என்று நினைத்து தூங்க சென்ற இந்திய ரசிகர்களுக்கு, மறுநாள் காலையில் மகேந்திர சிங் தோனி பெரிய சர்ப்ரைஸை வைத்திருந்தார்.

கடைசி 3 பந்துக்கு 2 ரன்கள் தேவை.. 3 பந்திலும் விக்கெட்டுகள்!

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 10 சுற்றில் முக்கியமான போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

yuvraj singh

147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு அருகாமையில் போட்டியை எடுத்துச்சென்றது. 19 ஓவர் முடிவில் 136 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த வங்கதேச அணிக்கு, கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் மஹமதுல்லா மற்றும் முஸ்ஃபிகூர் ரஹிம் இருவரும் இருக்க, கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.

hardik pandya

முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளில் 2 பவுண்டரிகளை விரட்டிய முஸ்ஃபிகூர் ரஹிம் கிட்டத்தட்ட வங்கதேச அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதுவரை போட்டியை பார்த்துக்கொண்டிருந்த இந்திய ரசிகர்கள், டிவியை ஆஃப் செய்துவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.

கடைசி 3 பந்துகளுக்கு 2 ரன்களே தேவையென்ற இடத்தில், இந்திய கேப்டன் தோனி கேப்டன்சியில் ஒரு மாயாஜாலமே நிகழ்த்தினார். அந்த இடத்திலிருந்து ஒரு ரன்னை கூட எடுக்கவிடாமல் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி.

Rahim

அழுத்தத்தில் வெற்றியை விரைவாகவே பெறவேண்டுமென தூக்கியடித்த ரஹிம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்த பந்தில் மொஹமதுல்லாவையும் வெளியேற்றி இந்திய அணி கலக்கியது. அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள் விழ, இப்போது வங்கதேசம் வெற்றிபெற 1 பந்துக்கு 2 ரன்கள் என போட்டி மாறியது.

எப்படியும் ஒரு ரன்னாவது எடுத்துவிடுவார்கள், போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தை ஹர்திக் லெந்த் பந்தாக வீச, பேட்ஸ்மேன் அதை விட்டுவிட்டாலும் ரன்னிற்கு ஓடினார். நேராக பந்து விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனியிடம் செல்ல, பந்தை பிடித்த தோனி பேட்ஸ்மேன் ஓடிவருவதற்குள் மின்னல் வேகத்தில் பறந்து ஸ்டம்பை தகர்த்து ரன்அவுட்டாக்கினார்.

ind vs ban

கடைசி 3 பந்துகளில் ஒரு ரன்னை கூட எடுக்கமுடியாமல் மோசமான ஒரு தோல்வியை பதிவுசெய்தது வங்கதேசம். ஒட்டுமொத்த வங்கதேச அணி மற்றும் வங்கதேச ரசிகர்கள் என அனைவரது இதயங்களையும் உடைத்தார் மகேந்திர சிங் தோனி.

வெற்றிக்கு தோனி சொன்ன மாஸ்டர் பிளான்!

போட்டிக்கு பிறகு பேசிய மகேந்திர சிங் தோனி, “யார்க்கர், ஒயிட் லைன் டெலிவரிகள், ஷார்ட் பிட்ச் பந்துகள் என எதையும் வீசக்கூடாது என முடிவுசெய்தோம். ஒருவேளை இந்த பந்துகளை வீசினால் பேட்ஸ்மேன் ஈசியாக ஒரு ரன்னை எளிதாக எடுத்துவிடமுடியும். அதனால் சரியான லெந்த் பந்தை வீசமுடிவுசெய்தோம், அது சரியாக ஒர்க் அவுட் ஆனது” என்று தெரிவித்திருந்தார். கடைசிநேரத்தில் கூட ஸ்மார்ட்டான முடிவுக்கும் தோனியின் கேப்டன்சிக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது!