விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: ஆடம் ஜம்பா மிரட்டல் பந்துவீச்சு - வங்கதேச அணியை ஊதிதள்ளிய ஆஸ்திரேலியா

Veeramani

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய வங்கதேசம் தொடக்கம் முதலே ரன்களைச் சேர்க்க திணறியது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக ஷமீம் ஹொசைன் 19 ரன்கள் சேர்த்தார். 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 73 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸம்ப்பா 5 விக்கெட்டுகளைச் சரித்தார்.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் ஃபின்ச் 20 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை விளாசி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதையடுத்து 6.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் குரூப்-1 புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.