விளையாட்டு

டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு

டி20 கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்த இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு

webteam

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெற இருக்கிறது.
 
இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வென்ற உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று, ஆறுதல் பெறும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்குகிறது. 

இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. 20 ஓவர் போட்டியிலும் வென்று இந்தியா தனது ஆதிக்கத்தை நீட்டித்து கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கும் இந்திய அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் வேட்கையுடன் உள்ளது. பேட்டிங்கில் வீராட்கோலி, ரோகித்சர்மா, தோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா மிரட்டி வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி 20 ஓவர் போட்டியிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்துடன் இருக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 6 போட்டிகளிலும், இலங்கை அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.