விளையாட்டு

"மனதிற்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுங்கள்!"-நடராஜன் ட்வீட்

"மனதிற்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுங்கள்!"-நடராஜன் ட்வீட்

jagadeesh

மனதிற்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால் அந்தப் பணி தானாகவே நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரும் தமிழக வீரருமான நடராஜன் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டி20 போட்டி தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும், காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில்கூட விளையாட முடியவில்லை. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஆனால் இன்றையப் போட்டியில் நடராஜன் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. ஆனால் நடராஜனின் காயம் பூரண குணமடைந்து அவர் வலைப்பயிற்சியும் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் மார்ச் 23-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நடராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்கு பின்பு இந்திய அணிக்காக நடராஜன் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடராஜன் "உங்களின் மனதுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால் தினசரி அந்தப் பணி தானாகவே உங்கள் வாழ்க்கையில் நடக்கும். இந்திய அணியினருடன் இணைந்ததில் மகிழ்ச்சி" என தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் நடராஜன்.