விளையாட்டு

சையத் முஷ்டக் அலி கோப்பை இறுதிப் போட்டி : தமிழக அணி வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு!

EllusamyKarthik

பிசிசிஐ நடத்தி வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான சையத் முஷ்டக் அலி கோப்பையை தமிழக அணி வெல்ல 121 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பரோடா அணி.

டாஸ் வென்ற தமிழக கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங்கை தேர்வு செய்து, பரோடாவை பேட் செய்ய சொல்லி பணித்தார். பரோடா அணியை 120 ரன்களுக்குள் கட்டுப்படுத்த மிகமுக்கிய காரணமே தமிழக அணியின் பந்துவீச்சு தான்.

குறிப்பாக மணிமாறன் சித்தார்த் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 20 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அவருக்கு உறுதுணையாக பாபா அபராஜித், சோனு யாதவ், முகமது என மூவரும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அதோடு விஷ்ணு சோலங்கி மற்றும் பானு பானியாவை ரன் அவுட் செய்திருந்தனர் தமிழக வீரர்கள். 8.5 ஓவர்களுக்கு எல்லாம் பரோடா அணி 36 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறியது.

தமிழக அணி 120 பந்துகளில் 121 ரன்களை எடுத்தால் சையத் முஷ்டக் அலி கோப்பையை இரண்டாவது முறையாக வெல்லலாம்.