விளையாட்டு

கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் தோனி : ரெய்னா புகழாரம்

கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் தோனி : ரெய்னா புகழாரம்

webteam

மகேந்திர சிங் தோனி, கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன் என இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார். 

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் மே 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பீல்டிங்கின் போது இடையில், தினேஷ் கார்த்திக் வசம் விக்கெட் கீப்பீங் பொறுப்பை கொடுத்துவிட்டு, மகேந்திர சிங் தோனி பீல்டிங் செய்தார். அப்போது ஆடுகளத்தில் பவுண்டரி எல்லையில் அவர் பீல்டிங் ஈடுபட்டபோது தோனி.. தோனி.. என்று மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவார முழக்கம் எழுப்பினர். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது.  

இந்நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியில் “தோனி,கேப்டன்களுக்கு எல்லாம் கேப்டன்” என தெரி‌வித்துள்ளார். தோனி தற்போது கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், களத்தில் விராட் கோலிக்கு அவர் கேப்டனாக செயல்படுகிறார் என தான் கருதுவதாக கூறியுள்ளார். மேலும் பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, பீல்டர்களை சரியான இடத்தில் நிறுத்துவது என இப்போதும் கேப்டனுக்கான பணிகளை தோனி மேற்கொண்டு வருவதாகவும் ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார்.