விளையாட்டு

மல்யுத்த வீரருக்கு ’கடி’: மைதானத்தில் ரகளை

மல்யுத்த வீரருக்கு ’கடி’: மைதானத்தில் ரகளை

webteam

தகுதி சுற்றுபோட்டியில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரை, மற்றொரு வீரர் கடித்ததால் ரகளை ஏற்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் மாதம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் தகுதியான இந்திய வீரர்களை அடையாளம் காண்பதற்கான தேர்வு டெல்லியில் நேற்று நடந்தது. ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற  சுஷில்குமார் தகுதி சுற்றின் அரை இறுதியில் பர்வீன் ராணாவுடன் மோதினார். விறுவிறுப்பான ஆட்டத்தில் பர்வீன் ராணா, சுஷில்குமாரின் கையை கடிக்க முயற்சித்தார். இதை பார்த்த சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அரைஇறுதியில் சுஷில்குமார் வெற்றி பெற்றார்.

பிறகு அரங்கின் வெளியே ஆதரவாளர்கள் இடையே மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கைகலப்பில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பர்வீன் ராணாவின் சகோதரர் நவீனும் தாக்கப்பட்டார். சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பர்வீன் ராணா புகார் தெரிவித்தார்.

‘போட்டியின் போது ராணா என்னை கடித்துவிட்டார். அதனால் எனக்கு பிரச்சினை இல்லை. நடந்த சம்பவம் கண்டனத்துக்கு உரியது’ என்று சுஷில் குமார் கூறினார்.