உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது பங்களாதேஷ் அணி.
உலகக் கோப்பை தொடரின் 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ்- ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 16 ரன்களிலும் தமிம் இக்பால் 36 ரன்களி லும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனும் விக்கெட் கீப்பர் ரஹீமும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
அரை சதமடித்த ஷகிப், 51 ரன்களிலும் ரஹீம் 83 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 7 விக் கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் ரகுமான் 10 ஓவரில் 39 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், கேப்டன் நைப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கான் அணி. கேப்டன் குல்பதின் நைப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 47 ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. பங்களாதேஷ் வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். ரஹமத் ஷா 24, அஸ்கர் ஆப்கன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், இந்தியாவுடனான போட்டியில் அபாரமாக ஆடிய முகமது நபி, இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவிய து, பங்களாதேஷ் அணி, 62 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. பேட்டிங் கில் அசத்திய ஷகிப் அல் ஹசன், பந்துவீச்சிலும் மிரட்டி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஏழு போட்டியில் ஆடியுள்ள பங்களாதேஷ் அணிக்கு இது 3-வது வெற்றி. ஆப்கான் அணி வெற்றி கணக்கைத் தொடங்க வில்லை.