விளையாட்டு

ஐபிஎல் 2021: சஞ்சு சாம்சன் மிரட்டல் அடி: ஹைதராபாத் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

JustinDurai
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களும் மஹிபால் லோமோர் 29 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியில் இன்று பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் களம் இறக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை.