2020 ஐபிஎல்-க்கும் ஒட்டக பேட்டுடன் வந்துவிடுங்கள் என ரஷித் கானுக்கு சன்ரைசர்ஸ் அணி நகைச்சுவையாக அழைப்பு விடுத்துள்ளது
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர், கடந்த சில வருடங்களாக தன் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இளம் பந்துவீச்சாளரான இவர், டி20 போட்டிகளில் 240 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் ரஷித் கான் விளையாடி வருகிறார்.
பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தும் ரஷித், தற்போது விளையாடி வரும் பிபிஎல் தொடரில் புது விதமான கிரிக்கெட் பேட்டை வைத்து விளையாடியுள்ளார். பேட்டின் பின்புறம் ஒட்டகத்தின் முதுகு போல வளைந்து இருக்கும் அவரின் பேட்டை கிரிக்கெட் ரசிகர்கள் ஒட்டக பேட் என அழைக்கிறார்கள்.
இது குறித்து ட்வீட் செய்த கிரிக்கெட் தொடர்பான ட்விட்டர் பக்கம் ஒன்று, இது 'ஒட்டக பேட்' என விளையாட்டாக குறிப்பிட்டது. அதற்கு பதில் அளித்துள்ள சன்ரைசர்ஸ் அணி, 2020 ஐபிஎல்க்கும் இந்த பேட்டுடன் வந்துவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளது.