விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தேர்வு

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தேர்வு

webteam

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கு மன்பீரித் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி தேர்வாகியுள்ளது.

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா ஹாக்கி அணி 10 முறை வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. இந்தாண்டிற்கான சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் வரும் 23 ஆம் தேதி முதல் மலேசியாவின் இப்போ (Ipoh) நகரில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மன்பீர்த் சிங் கேப்டனாக விளையாடவுள்ளார். காயம் காரணமாக இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களான ஆகாஷ்தீப் சிங், ரூபீந்தர் பால் சிங், ஹர்மன்ப்ரீத் சிங், லலீத் மற்றும் ராமன்தீப் சிங் ஆகியோர் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இந்திய ஹாக்கி அணி இந்தத் தொடரில் இளம் வீரர்களை கொண்டே களமிறங்கவுள்ளது. 

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும். அத்துடன் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளரான ஹரேந்திர சிங்கின் பதிவிகாலம் முடிவடைந்துவிட்டது. இதனால் இந்திய அணி இந்தத் தொடரில் பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடை பெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய ஹாக்கி அணி இன்னும் தகுதி பெறவில்லை. இதனால் இந்திய ஹாக்கி அணி இந்த ஆண்டு பெறும் சவால் நிறைந்த ஆண்டாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

அணி விவரம்:
மன்பீர்த் சிங் (கேப்டன்), சுரேந்தர் குமார் (துணை கேப்டன்), குரிந்தர் சிங், வருண் குமார், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்டா சர்மா, மன்தீப் சிங், சுமித் குமார், சிமரஜித் சிங், சிலானந்த் லாக்ரா, அமித் ரோகிதாஸ், கோத்தாஜீத் சிங், பீரேந்தர் லாக்ரா, பி.ஆர் ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பதக்.