விளையாட்டு

'2023 உலகக் கோப்பையில் இந்த வீரர் முக்கியமானவராக இருப்பார்' - சபா கரீம்

PT

எதிர்வரும் 2023 ஒரு நாள் உலக்கோப்பையில் ஷுப்மன் கில்லை பேக்-அப் ஓப்பனராக களம் இறக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரும்,  விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரீம், தெரிவித்துள்ளார்.

மேலும் ஷுப்மன் கில் ஒரு முப்பரிமாண வீரர் என்றும் அவர் மூன்று விதமான கிரிக்கெட் பார்மேட்டிலும் சிறப்பாக ஆடிவருகிறார் என தெரிவித்த அவர், தற்போதைய இந்திய கேப்டன் கேஎல் ராகுல் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறியிருக்கும் நிலையில் அவரை ஒரு நாள் போட்டிகளில் நான்காம் நிலை வீரராக களமிறக்கலாம் என்றும், ஷுப்மன் கில்லை எதிர்வரும் 2023 உலககோப்பைக்கு பேக்-அப் ஓப்பனராக தயார் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

ஷுப்மன் கில் வெஸ்ட் இண்டிஸ் உடனான ஒரு நாள் போட்டிக்கான தொடரில் 3 போட்டிகளில் 205 ரன்கள் அடித்து ஷிகர் தவானை விட அதிக ரன்களை அடித்த வீரராக முதலில் இருக்கிறார். மேலும் அவருடைய சிறப்பான ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தி இருக்கும் கில் ஜிம்பாபே அணிக்கு எதிராக ஷிகர் தவானுடன் சேர்ந்து 82 ரன்களை எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்தார்.

மேலும் ஷிகர் தவான் - ஷுப்மன் கில் இணை அடித்த 192 ரன்கள் தான் இதுவரை ஜிம்பாபே அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  சபா கரிம், “இந்த ஜிம்பாபே தொடரில் கேஎல் ராகுல் நான்காம் நிலை வீரராக ஆடியிருக்கும் நிலையில் தான் கில் ஓப்பனராக களம் இறக்கப்பட்டார். இதன்படி இந்திய அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் இந்தியாவின் பேக்-அப் ஓப்பனரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இருப்பது தெரிகிறது.”

ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் முன்னணி தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்கும் நிலையில், ஷுப்மன் கில் ஒரு சிறந்த பேக்-அப் ஓப்பனராக செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் மூன்று விதமான கிரிக்கெட் ஃபார்மேட்களிலும் சிறப்பாக விளையாடுவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அதை கில் சிறப்பாக செய்து காட்டுகிறார். அவர் கடினமான ஆடுகளங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை அடித்துள்ளார். அவர் ஒரு நேச்சுரல் பிளேயர். இயற்கையாகவே அவருக்கு திறமை இருக்கிறது என்றார் அவர்.