இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 301 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. ஹசல்வுட் 4 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 186 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து, ஆஸ்திரேலியா 383 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க உதவினார். பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் சேர்த்திருந்தது. ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.