விளையாட்டு

ஸ்மித், வார்னர் விளையாட ஓராண்டு தடை

ஸ்மித், வார்னர் விளையாட ஓராண்டு தடை

webteam

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் அனைத்துவித போட்டிகளிளும் ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கபட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதபடுத்திய விவகாரம் உலக கிரிக்கெட் அரங்கில் புயலை கிளப்பிகொண்டு இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கவனித்து வருகின்றது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னால் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு ஐ.பி.எல், உட்பட எந்த போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது. அதேபோல் கேப்டன் பொறுப்பு வகிக்கவும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கபட்டுள்ளது.  தொடக்க வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் ஒன்பது மாதங்கள் தடை விதிக்கப்படுவார் என்றும், அணியின் தலைமை பயிற்சியாளர்  பதவி விலகுவார் எனவும் தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது