விளையாட்டு

”உலகக்கோப்பை வென்ற சிலமாதங்களிலே தோனியின் கேப்டன்பொறுப்பை தூக்க நினைத்தார்கள்” ஸ்ரீநிவாசன்

webteam

2011ஆம் உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களிலேயே தோனியை கேப்டனில் இருந்து நீக்க தேர்வாளர்கள் நினைத்ததாக அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஸ்ரீநிவாசன் பதவி வகித்தார். அந்த நேரத்தில் தான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் தான் பிசிசிஐ தலைவராக இருந்தபோது நடந்த சில சம்பவங்களை ஸ்ரீநிவாசன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் கூறும்போது, “உலகக் கோப்பையை வென்ற சில மாதங்களில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சரியாக விளையாடவில்லை. அப்போது தேர்வாளர்கள் தோனிக்கு பதிலாக யாரை கேப்டனாக தேர்வு செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது. அப்போது நான் தோனியே கேப்டனாக தொடர்வார் என்றேன். அதற்காக நான் எனது பிசிசிஐ தலைவர் என்ற பதவியை முழுவதும் பயன்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.