விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாம்பியன் ஆனார் ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: சாம்பியன் ஆனார் ஸ்ரீகாந்த்

webteam

ஆஸ்திரேலியா ஓபன் பாட்மிண்டன் தொடர் இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும், சீனாவின் சென் லாங்கும் மோதினர். இந்த போட்டியில். 22-20, 21-16 என்ற நேர் செட்களில் சென் லாங்கை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஸ்ரீகாந்த் இந்த ஆண்டில் சூப்பர் சீரிஸ் தொடரில் 2-வது பட்டம் வென்றுள்ளார்.