இலங்கை அணி வீரர் குணரத்னே காயம் காரணமாக இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார்.
காலேவில் நடைபெற்று வரும் போட்டியில், தவான் 31 ரன்களில் இருந்தபோது அடித்த பந்தை, கேட்ச் செய்ய முற்பட்டார். அப்போது பந்து தாக்கியதில், குணரத்னேவின் இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் 10 வீரர்களுடன் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் குணரத்னே விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.