விளையாட்டு

203 ரன்களில் சுருண்டது இலங்கை : மோரிஸ், டிவைன் அபார பந்துவீச்சு

webteam

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 203 ரன்களில் சுருண்டது.

உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் போட்டி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே பிரிட்டனில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியில், கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான கருணரத்னே ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பெராரா மற்றும் ஃபெர்னாண்டோ அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சரியாக 30 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த அனைவரும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி சொதப்பினர். இதனால் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 203 ரன்களில் சுருண்டனர். தென்னாபிரிக்க அணியில் சிறப்பாக பந்துவீசிய மோரிஸ் மற்றும் டிவைன் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். ரபாடா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.