இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி 334 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கேடன் ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்ச் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். கவாஜா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்ச் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடினர். ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் உயர்ந்தது. 97 பந்துகளில் சதம் விளாசிய பின்ச், பின்னர் அதிரடி காட்டினார். அவர் 132 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 73 ரன்களுடன் ஸ்மித் அவுட் ஆனார்.
மார்ஷ் 3, கேரே 4, கம்மிங்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் போனது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.
இலங்கை அணியில் உடனா இரண்டு விக்கெட் சாய்த்ததோடு, இரண்டு அற்புதமான ரன் அவுட்டையும் செய்தார்.