விளையாட்டு

ஐசிசி டி20 உலகக் கோப்பை: இலங்கை - நமீபியா இன்று மோதல்

jagadeesh

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற இருக்கும் முக்கிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.

ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று ஒமனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பப்புவா நியூ கினி அணியை ஓமன் வீழ்த்தியது. மேலும் நேற்றிரவு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஸ்காட்லாந்து அணி. இந்நிலையில் இன்று மீண்டும் இரண்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இதில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருக்கும் போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மேலும் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இலங்கை - நமீபியா அணிகள் மோதுகின்றன. இவ்விருப் போட்டிகளிலும் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் வெற்றிப்பெற்று பிரதான சுற்றுக்குள் நுழைய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கெனவே நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் அக்டோபர் 22 ஆம் தேதி வரை ஒமான், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும். தகுதிச் சுற்றில் விளையாட உள்ள 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், ஒமான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.