விளையாட்டு

SRH vs KKR : ஹைதராபாத் வெற்றிபெற 164 ரன்கள் தேவை

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்று வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. 

கொல்கத்தா அணியின் ஓப்பனர்கள் ராகுல் திரிபாதியும், சுப்மன் கில்லும் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

திரிபாதி 23 ரன்களில் அவுட்டானார். 

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து பட்டையை கிளப்பிய கில் 36 ரன்களில் அவுட்டானார்.

நித்திஷ் ராணா தன்பங்கிற்கு 20 பந்துகளில் 29 ரன்களை குவித்தார்.  

கொல்கத்தாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரஸ்ஸல் இந்த போட்டியிலும் தனது மோசமான ஃபார்ம் காரணமாக வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

சந்தீப் ஷர்மா மற்றும் விஜய் ஷங்கர் ஹைதராபாத் அணிக்காக எக்கானமியாக பந்து வீசினர்.

கேப்டன் மோர்கனும், தினேஷ் கார்த்திக்கும் ஐம்பது ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது கொல்கத்தா.