துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து ஹைதராபாத் அணி பேட் செய்து இருபது ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.
சாஹா, வார்னர் மற்றும் மணீஷ் பாண்டே ஹைதராபாத் அணிக்காக அற்புதமாக பேட் செய்தனர்.
இமாலய இலக்கான 220 ரன்களை டெல்லி அணி விரட்டியது.
டெல்லிக்காக தவானும், ரஹானேவும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் தவான் டக் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் பட்டேல் என டெல்லி பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
ரிஷப் பண்ட் மட்டுமே டெல்லிக்கு ஆறுதலாக விளையாடினார். 35 பந்துகளில் 36 ரன்களை குவித்தார்.
19 ஓவர்கள் முடிவில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது டெல்லி.
இதன் மூலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் அணி.