விளையாட்டு

DC vs SRH : ஹைதராபாத் வெற்றி பெற 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி!

EllusamyKarthik

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 20வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இருபது ஓவர்கள் பேட் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

அந்த அணிக்காக தவான் மற்றும் பிருத்வி ஷா இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். இருவரும் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். தவான் 26 பந்துகளில் 28 ரன்களை எடுத்து ரஷீத் கான் சுழலை மிஸ் செய்து கிளீன் போல்ட் ஆனார். 35 பந்துகளில் அரை சதம் விளாசினார் பிருத்வி ஷா. இருப்பினும் அடுத்த சில பந்துகளில் கலீல் அடுத்த அற்புதமான த்ரோவில் அவுட்டானார் அவர். 

தொடர்ந்து பண்ட் மற்றும் ஸ்மித் 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். பண்ட் 27 பந்துகளில் 37 ரன்களை சேர்த்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் அவுட்டானார். ஹெட்மயர் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து பண்ட் அவுட்டான அதே ஓவரில் அவுட்டானார். ஸ்மித் 25 பந்துகளில் 34 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். ஸ்டாய்னிஸ் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

ஹைதராபாத் அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.