விளையாட்டு

மிரட்டிய தவான், ஹெட்மயர் - ஹைதராபாத் அணிக்கு 190 ரன் இலக்கு!

மிரட்டிய தவான், ஹெட்மயர் - ஹைதராபாத் அணிக்கு 190 ரன் இலக்கு!

EllusamyKarthik

அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.

தவானும் - ஸ்டாய்னிஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.  

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்ட பவர் பிளே ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை குவித்தது டெல்லி. 

தவான் மற்றும் ஸ்டாய்னிஸ் இணையர் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டினர். இருவரும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பரிசோதனை முயற்சியாக ஓப்பனிங்கில் இறங்கிய ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 38 ரன்களை குவித்து ரஷீதின் அற்புதாமான சுழலில் க்ளீன் போல்டானார். தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் களம் இறங்கினார். 10 ஓவர் முடிவில் 102 ரன்களை எடுத்தது டெல்லி. 

ஷ்ரேயஸ் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க ஹெட்மயர் கிரீஸுக்கு  வந்தார். தன் பங்கிற்கு 22 பந்துகளில் 42 ரன்களை அதிரடியாக குவித்தார் அவர்.

மறுமுனையில் டெல்லிக்காக ஆங்கரிங் இன்னிங்ஸ் விளையாடிய தவான் 50 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். அதில் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடங்கும். மூன்றாவது முறையாக இந்த சீசனில் சதம் விளாசுவார் தவான் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சந்தீப் ஷர்மாவின் பந்துவீச்சில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அது அவுட் இல்லை என ரிப்ளேவில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

இருபது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது டெல்லி. 200 ரன்களுக்கு மேல் டெல்லி அணி எப்படியும் எடுத்துவிடு என எதிர்பார்த்திருந்த நிலையில், அதை கடைசி பத்து ஓவரில் மொத்தமாக சேர்ந்து கட்டுப்படுத்தினர் ஹைதராபாத் பவுலர்கள். சந்தீப் சர்மாவும், நடராஜனும் சிறப்பாக கடைசி இரண்டு ஓவர்களை வீசினர்.

ஹைதராபாத் அணி 190 ரன்களை விரட்டி வருகிறது.