நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
கோலியும், படிக்கல்லும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் விரித்த வலையில் சிக்கி கோலி விக்கெட்டை இழந்தார்.
ஹோல்டர் வீசிய இரண்டாவது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்டார் கோலி.
லெக் திசையில் ஷார்ட் லெந்த்தாக வீசப்பட்ட டெலிவரியை தட்டிவிட்டு ரன் சேர்க்க முயன்ற போது பந்து கிளவ்வில் பட்டு கீப்பர் கோஸ்வாமியின் கிளவுசுக்குள் தஞ்சமடைந்தது.
தொடர்ந்து இளம் வீரர் படிக்கல்லும் ஹோல்டர் வீசிய நான்காவது ஓவரில் வெளியேறினார்.