விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து: 11வது முறையாக ஸ்பெயின் தகுதி

உலகக்கோப்பை கால்பந்து: 11வது முறையாக ஸ்பெயின் தகுதி

webteam


ஸ்பெயின் அணி, தொடர்ந்து 11ஆவது முறையாக உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது. 

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள், கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்பெயினும் அல்பேனியா அணியும் மோதின. இந்தப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வென்றது. தனது பிரிவில் எட்டாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம்,  உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதியை ஸ்பெயின் அணி உறுதி செய்தது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 11 அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன.