விளையாட்டு

194 ரன்களில் தென்னாப்ரிக்காவை சுருட்டியது இந்தியா!

194 ரன்களில் தென்னாப்ரிக்காவை சுருட்டியது இந்தியா!

webteam

3வது டெஸ்ட் முதல் இன்னிங்க்ஸில் 194 ரன்களுக்கு தென்னாப்ரிக்கா ஆல்அவுட் ஆனது.

இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி தென்னாப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள நியூ வாண்டெரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய்யும், லோகேஷ் ராகுலும் 8 மற்றும் 0 ரன்களில் வெளியேற, தொடக்கத்திலேயே இந்திய அணி தடுமாற்றம் அடைந்தது. பின்னர் வந்த புஜாராவும், கேப்டன் கோலியும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தனர்.

பந்துவீச்சாளர் புவனேஸ்குமார் 30 ரன்கள் எடுத்தார். 76.4 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை நிறைவு செய்தது இந்திய அணி. 

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்ரிக்கா, முதல் நாள் இறுதியில் 6 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இதைத்தொடர்ந்து இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி, நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ராபாடாவும், அம்லாவும் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 30 ரன்களில் ராபாடா ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸும் 5 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாத தென்னாப்ரிக்க அணி, 65.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு சுருண்டது.

இதற்கிடையே ப்ளண்டெர் மட்டும் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியா தற்போது 2வது இன்னிங்க்ஸ் பேட்டிங்கை வெற்றி கரமாக விளையாடி வருகிறது.