விளையாட்டு

தாதாவாக திரைக்கு வருகிறார் கங்குலி !

தாதாவாக திரைக்கு வருகிறார் கங்குலி !

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்கை திரைப்படமாக
தயாரிக்கப்பட இருப்பதாத தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்கை ஏற்கெனவே திரைப்படங்களாக வெளியாகி ஹிட் அடித்தன. மேலும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்போது பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர், கங்குலியின் வாழ்க்கை படத்தை தயாரிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏற்கெனவே கங்குலி வெளியிட்ட தனது சுயசரிதை புத்தகமான "A Century is not Enough" வைத்து திரைக்கதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கங்குலி கூறியது "இப்போதுதான் ஏக்தா கபூரின் பாலாஜி தயாரிப்பு நிறுவனத்திடம் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். விரைவில் முழு விவரங்களை கூறுகிறேன்" என்றார் அவர்.