விளையாட்டு

“விரைவில் மகளிருக்கான ஐபிஎல் தொடங்கும்” - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

EllusamyKarthik

கடந்த 2008 முதல் இந்திய கிரிக்கெட் வாரியம் ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டான ஐபிஎல் போட்டிகளை நிர்வகித்து வருகிறது. வரும் மார்ச் மாதம் 15-வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பிரத்யேகமாக பங்கேற்று விளையாடும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா. 

“இந்திய கிரிக்கெட் வாரியம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட்டை ஆரம்பிப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொண்டு வருகிறது என்பதை இந்த நேரத்தில் நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் டி20 சேலஞ்ச் போட்டிக்கு ரசிகர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து அதற்கு முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்தோம்” என தெரிவித்துள்ளார் அவர். 

மகளிர் பிக் பேஷ் லீக், மகளிர் கிரிக்கெட் சூப்பர் லீக், The Hundred மாதிரியான தொடர்கள் உலகளவில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களாகும். இதில் மகளிர் கிரிக்கெட் சூப்பர் லீக் கடைசியாக கடந்த 2019-இல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.