மும்பை இண்டியன்ஸ் அணியின் துணைக்கேப்டன் பொல்லார்டின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
"நயவஞ்சகமாக கீழிறக்கி விட நினைக்கும் நண்பனை விட, வெறுக்கிறேன் என நேரடியாகக் கூறும் எதிரி எனக்கு இருக்க வேண்டும்" என்ற வாக்கியத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை பொல்லார்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐதராபாத் அணி உடனான போட்டியை அடுத்தே அவர் இந்தப் பதிவை இட்டிருந்தார். இதனை ரோகித் சர்மாவைக் குறிப்பிட்டுதான் பொல்லார்டு பகிர்ந்துள்ளார் என ஒரு தரப்பினரும், ஐதராபாத் அணியின் வீரர் ஹோல்டரைக் குறிப்பிட்டு தான் பகிர்ந்திருக்கிறார் என மற்றொரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பதவி ஹோல்டருக்கு வழங்கப்பட்டதால் பொல்லார்டு விரக்தியில் உள்ளார் என்று சிலரும், மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை தன்னிடம் இருந்து திரும்பப் பெற்றதால் அதிருப்தியில் உள்ளார் என சிலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.