விளையாட்டு

இலங்கையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்

இலங்கையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்

webteam

இலங்கையில் அடுத்த ஆண்டு நடக்கும் முத்தரப்பு டி 20 போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தை ஒட்டி, அங்கு முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொழும்பில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இத்தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய சிஇஓ ராகுல் ஜோஹ்ரி தெரிவித்தார்.