விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி: சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி: சிந்து, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

webteam

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இரண்டாவது சுற்றில் ஜப்பானின் சயாகா தகாஹசியை எதிர்த்து விளையாடினார். இதில் 21-14, 21-13 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றியை வசமாக்கினார். ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-17 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் வாங் வின்சென்டை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், இரண்டா‌து சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். ஜப்பானின் யமாகுச்சி 21-9, 23-21 என்ற நேர் செட்களில் சாய்னாவை தோற்கடித்தார்.