நாக்பூரில் நடைபெற்று வரும் தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
தேசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் சாய்னா நேவால் - அகர்ஷி கஷ்யப் மோதினர். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா நேவால் 21-17, 21-10 என்ற நேர் செட்களில் அகர்ஷி கஷ்யப்பை வென்றார். மற்றொரு போட்டியில் பி.வி.சிந்து 21-11, 21-17 என்ற நேர் செட்களில் ஷிர்யான்ஷியை தோற்கடித்தார். ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.