தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய சி அணி, அபாரமாக ஆடி 366 ரன்கள் குவித்துள்ளது.
தியோதர் டிராபிக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. நவம்பர் 4-ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா ஏ, பி, சி என மூன்று அணிகள் மோதுகின்றன. ஏ அணிக்கு ஹனுமா விஹாரி, பி அணிக்கு பார்திவ் பட்டேல், சி அணிக்கு சுப்மான் கில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. இதில் பி அணி வெற்றி பெற்றது.
ராஞ்சியில் இன்று நடக்கும் போட்டியில், விஹாரி தலைமையிலான இந்தியா ஏ மற்றும் சுப்மான் கில் தலைமையிலான இந்தியா சி அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்திய சி அணி, அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வாலும் சுப்மான் கில்லும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். மயங்க் அகர்வால் 111 பந்துகளில் 120 ரன்களும் சுப்மான் கில் 143 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் இந்திய சி அணி களமிறங்கியது. 19 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.