விளையாட்டு

இளையோர் உலகக்கோப்பையில் அசத்திய சுப்மான்: பின்னணியில் யுவராஜ்

இளையோர் உலகக்கோப்பையில் அசத்திய சுப்மான்: பின்னணியில் யுவராஜ்

webteam

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்திய சுப்மான் கில் தனது சிறப்பான ஆட்டத்திற்கு யுவராஜின் ஆலோசனை தான் பெரிதும் உதவியது என தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைப்பெற்றது. இதில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது. இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் டிராவிட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டிராவிட் மாதிரி ஒரு பயிற்சியாளர் தேவை என்று அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து அசத்திய சுப்மான் கில் கூறுகையில், தனது சிறப்பான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங்கின் அளித்த ஆலோசனை பெரிதும் உதவியது எனத் தெரிவித்துள்ளார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற போது யுவராஜ் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாக அவர் கூறியுள்ளார். பேட்டிங் நுணுக்கங்கள், களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரைகள் கூறியதாக தெரிவித்துள்ளார். இது உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியதாக தெரிவித்துள்ளார்.