ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்கவது சுற்றில் தோல்வியடைந்து நடப்பு சாம்பியனான சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் வெளியேறியுள்ளார்.
விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய 4 டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளும் கிராண்ட்ஸ்லாம் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகின்றன. இதில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தான் ஆண்டின் தொடக்கதில் நடைபெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் போட்டி.
இந்த தொடரின் நான்கவது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டீஃபனோஸ் சிட்சிபஸ் விளையாடினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-7(11),7-6(3),7-5,7-6(5), என்ற செட் கணக்குகளில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி ஸ்டீஃபனோஸ் சிட்சிபஸ் வெற்றிப்பெற்றார். இதன்முலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 6 முறை பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர் நான்கவது சுற்றுடன் வெளியேறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியனான ரோஜர் ஃபெடரர் இந்த ஆண்டு நான்கவது சுற்றில் வெளியேறியது ரசிகர்களிடையே மிகுந்த எமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த போட்டி முடிந்தவுடன் ஸ்டீஃபனோஸ் சிட்சிபஸ் “இந்த உலகில் தற்போது மிகுந்த மகழ்ச்சியான மனிதன் நான்” என்று கூறி வெற்றி களிப்பில் மகிழ்ந்தார்.