விளையாட்டு

ரிடையர்டா, என் நோக்கமே வேற: சோயிப் மாலிக்

ரிடையர்டா, என் நோக்கமே வேற: சோயிப் மாலிக்

webteam

இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த உலக கோப்பையை வெல்வதுதான் தனது நோக்கம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.

35 வயதான சோயிப் மாலிக்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சீனியர் வீரர். அவர் கூறும்போது, ‘சாம்பியன்ஸ் கோப்பையை நாங்கள் வென்றுள்ளோம். இதையடுத்து 2019-ல் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நாங்கள் கோப்பையை வெல்வோம். இளைஞர்களுக்கு வழிவிட்டு நான் விலகவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் சொல்வது எனக்குத் தெரியும். ஆனால், என் நோக்கமே வேறு. ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றேன். அப்போது கூட நான் இரட்டை சதம் அடித்துவிட்டு ஓய்வை அறிவித்தேன். இப்போது அணியில் இருப்பதற்கான உடல் தகுதி என்னிடம் இருக்கிறது’ என்றார்.