விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் சோயிப் மாலிக் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் சோயிப் மாலிக் சாதனை!

webteam

டி20 கிரிக்கெட் போட்டியில், நூறு போட்டிகளில் விளையாடியுள்ள முதல் வீரர் என்ற சாதனையை சோயிப் மாலிக் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக். 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 261 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்களும் 154 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் ஆடிய ஆஸ்திரே லிய அணி, 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இது அவருக்கு நூறாவது டி20 போட்டி ஆகும். 

இவரை அடுத்து ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தோனி, 90 போட்டிகளில் விளையாடியுள்ளார்.